செய்திகள்

ராமேஸ்வரத்தில் புதுப்பிக்கப்பட்டட 30 தீர்த்தங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார் தமிழக ஆளுநர் 

தினமணி

ராமேஸ்வரத்தில் புதுப்பிக்கப்பட்டட 30 தீர்த்த குளங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார். 

ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற ராமநாதசுவாமி திருக்கோயில் மற்றும் கோயிலை சுற்றிலும் உள்ள பகுதிகளில் 64 புனித தீர்த்த கிணறுகள் மற்றும் தீர்த்த குளங்கள் இருந்தன. 

1964-ல் ஏற்பட்ட புயலுக்குப் பிறகு கோயிலுக்கு வெளியில் இருந்த தீர்த்த குளங்கள் பராமரிப்பின்றி சிதைந்துபோயின. இதனால் பக்தர்கள் தற்போது கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் மட்டும் புனித நீராடி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக ராமேஸ்வரம் தங்கச்சிமடம், பாம்பன் மண்டபம் ஆகிய இடங்களில் புதைந்துபோன 30 தீர்த்த குளங்களை கண்டுபிடித்து ரூ.5 கோடி செலவில் புனரமைப்பு செய்தனர். இவ்வாறு புனரமைக்கப்பட்ட தீர்த்த குளங்களை மக்கள் பயன்பாட்டுக்கு இன்று ஆளுநர் அர்ப்பணித்தார். மக்கள் நீராடும் வகையில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT