செய்திகள்

பேரம்பாக்கத்தில் பார் வேட்டை திருவிழா

DIN


பேரம்பாக்கத்தில் காணும் பொங்கலான வியாழக்கிழமை நடந்த பார் வேட்டை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலன்று கூவம் ஆற்றங்கரையோரம் பார் வேட்டை விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இவ்விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பேரம்பாக்கத்தில் இருந்து பாலமுருகன், காசி விஸ்வநாதர், சோளீஸ்வரர் மற்றும் களாம்பாக்கம் கிராமத்தில் இருந்து திருநாகேஸ்வரர், நரசிங்கபுரம் கிராமத்தில் இருந்து வேங்கடப் பெருமாள் ஆகிய உற்சவர்கள் வந்தனர். 
அதைத் தொடர்ந்து சிவபுரம் கிராமத்தில் இருந்து குறுந்த விநாயகர், மாரிமங்கலம் கிராமத்தில் இருந்து வள்ளலார், மாரியம்மன், பழைய கேசவரத்தில் இருந்து சிவன் என மொத்தம், 10 உற்சவர்கள் வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மைதானத்தில் ஒரே இடத்தில் கூடி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பார் வேட்டை விழாவை பேரம்பாக்கம்,  நரசிங்கபுரம், கடம்பத்தூர், மப்பேடு, மாரிமங்கலம், தக்கோலம் உள்பட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்து கண்டுகளித்தனர். 
இரவு, 9 மணிக்கு வாண வேடிக்கை நடைபெற்றதும், அனைத்து உற்சவர்களும் பேருந்து நிலையத்தில் ஒன்றாக கூடினர். பின்னர் கிராமப் பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அந்தந்த கிராமங்களில் உற்சவர்கள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
பாதுகாப்புக்காக காவல் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT