செய்திகள்

வரதராஜப் பெருமாள் கோயில் தெப்போற்சவம்

DIN


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை தெப்போற்சவம் தொடங்கியது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் தைப்பூச தெப்போற்சவ விழா 3 நாள்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதன்படி, முதல் நாள் தெப்போற்சவம் திங்கள்கிழமை இரவு தொடங்கியது. அப்போது, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார், பெருந்தேவி தாயாருடன், அனந்தசரஸ் தெப்ப குளத்தில் வரதராஜப் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து, மூன்று முறை வலம் வந்தார். 
அதுபோல், இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தெப்போற்சவத்தில் 5 முறை வலம் வந்தார். இதைத்தொடர்ந்து, மூன்றாவது நாளான புதன்கிழமை 7 முறை வலம் வருகிறார். தெப்போற்சவத்தில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT