செய்திகள்

அத்திவரதரை தரிசிக்கச் செல்வோருக்கு: நாளை முதல் 6 சிறப்பு மின்சார ரயில்கள் அறிவிப்பு!

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனத்துக்காக  6 சிறப்பு மின்சார  ரயில்கள் ஜூலை 6-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன. 

தினமணி


காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனத்துக்காக  6 சிறப்பு மின்சார  ரயில்கள் ஜூலை 6-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன. 

முதல் சிறப்பு மின்சார ரயில், தாம்பரத்தில் இருந்து காலை 4.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.05 மணிக்கு காஞ்சிபுரத்தை  சென்றடையும்.

இரண்டாவது சிறப்பு மின்சார ரயில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 4.25 மணிக்கு புறப்பட்டு காலை 7.15 மணிக்கு காஞ்சிபுரத்தை அடையும்.

மூன்றாவது சிறப்பு மின்சார ரயில், செங்கல்பட்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.55 மணிக்கு காஞ்சிபுரத்தை  சென்றடையும்.

நான்காவது சிறப்பு மின்சார ரயில், செங்கல்பட்டில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.40 மணிக்கு காஞ்சிபுரத்தை அடையும்.

ஐந்தாவது சிறப்பு மின்சார ரயில், செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு காஞ்சிபுரத்தை சென்றடையும்.

ஆறாவது சிறப்பு மின்சார ரயில், செங்கல்பட்டில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும். 

அதேபோல, மறுமார்க்கமாக காஞ்சிபுரத்தில் இருந்து 6 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

முதலாவது சிறப்பு மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு காலை 8.20 மணிக்கு செங்கல்பட்டை அடையும்.

இரண்டாவது  சிறப்பு மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.40 மணிக்கு செங்கல்பட்டை அடையும்.

மூன்றாவது  சிறப்பு ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து நண்பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு செங்கல்பட்டை அடையும்.

நான்காவது சிறப்பு மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு செங்கல்பட்டை அடையும்.

ஐந்தாவது சிறப்பு ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு தாம்பரத்தை வந்ததடையும்.

ஆறாவது சிறப்பு ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனது கட்சியிலேயே செல்வப் பெருந்தகையின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது - Tamilisai

2026 திமுக தேர்தல் அறிக்கை : ஜன. 19 முதல் சுற்றுப்பயணம்!

தெரு நாய்களால் பாதிப்பு ஏற்பட்டால் உணவு, ஆதரவளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

தேர்தல் பணிகள் : ஜன. 20-ல் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT