செய்திகள்

ஒடிசாவில் பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை தொடக்கம்

DIN

ஒடிசா மாநிலம் பூரியில் உலக புகழ்பெற்ற ஜெகன்நாதர் ஆலயத்தில் 142-வது ரத யாத்திரை நேற்று தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 

ஒவ்வொரு ஆண்டும் ஒடிசாவில் புகழ்பெற்ற திருவிழாவாகப் பூரி ரதயாத்திரை நடைபெறும். ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த ரத யாத்திரையில் ஒடிசா மட்டுமல்லாது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்பார்கள். 

ஜெகன்நாதருடன் அவரது சகோதரராக வழிபடப்படும் பாலபத்திரர் மற்றும் சகோதரி சுபத்ரா தேவியும் தனித்தனி ரதங்களில் வலம் வந்தனர். இவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்று மூன்று தேர்களையும் வடம் பிடித்து இழுத்தனர். நேற்று பிற்பகலில் தொடங்கிய ரதயாத்திரைக் காணப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூரியில் திரண்டனர்.

இந்த ரதங்கள் அங்குள்ள கோயிலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காகத் தொடர்ந்து ஒன்பது நாட்கள் வைக்கப்பட்டிருக்கும். பாதுகாப்புக்காக ஏராளமான பக்தர்கள் பூரியில் குவிக்கப்பட்டுள்ளனர். ரத யாத்திரையை முன்னிட்டு பூரி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

SCROLL FOR NEXT