செய்திகள்

நெசப்பாக்கம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

சென்னை விருகம்பாக்கம் - நெசப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் நூதன..

DIN

சென்னை விருகம்பாக்கம் - நெசப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் நூதன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நாளை, வியாழக்கிழமை (ஜூலை 11, 2019) நடைபெற உள்ளது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளின் நல்லாசியுடன், தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் விருகை வி.என். ரவி அவர்கள் முன்னிலையில் ஆலய ராஜகோபுரம் மற்றும் பரிவார சகிதம் இந்த நூதன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் காலை 10.00 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகம் மற்றும் யாக சாலை பூஜைகளை சிவாகம வித்வான் சிவஸ்ரீ சுவாமிநாத சிவாச்சாரியார், ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ ஏ.சிதம்பரேஸ்வர சிவாச்சாரியார் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து ஜூலை 7-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை மண்டல பூஜை பூர்த்தியடைகிறது என்று ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

SCROLL FOR NEXT