செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க உள்ளூர் மக்கள் இன்று ஒருநாள் மட்டும் வரவேண்டாம்: ஆட்சியர் வேண்டுகோள்

காஞ்சிபுரம் அத்தி வரதரைத் தரிசிக்க இன்று ஒருநாள் மட்டும் உள்ளூர் மக்கள் வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி

காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் அத்தி வரதரைத் தரிசிக்க இன்று ஒருநாள் மட்டும் உள்ளூர் மக்கள் வரவேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இன்று காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரைக் காண குவிந்திருப்பதால், உள்ளூர் மக்களும், வெளியூரில் இருந்து வந்திருக்கும் கர்பிணிகள் மற்றும் வயதானவர்கள் அத்திவரதரை தரிசிக்க வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே கூட்டம் அலைமோதுவதால், உள்ளூர் மக்களும் கோயிலுக்கு வருகை தந்தால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால் மாவட்ட ஆட்சியர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அத்திகிரி அருளாளன் பற்றி அறியப்படாத சில தகவல்கள்!

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அத்திவரதர் பெருவிழா கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17 தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 17 நாள்களில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர்.

அத்திவரதர் பெருவிழாவால் காஞ்சிபுரம் நகரம் விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் வந்துசெல்லும் இடமாக வரதர் கோயில் களைகட்டியுள்ளது. 

இந்நிலையில், நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் அத்திவரதரை தரிசிக்க இன்று ஒரு நாள் மட்டும் உள்ளூர் மக்கள் வரவேண்டாம் என்று  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

மேலும், காஞ்சிபுரத்தில் பக்தர்களின் கூட்டம் இன்று கூடுதலாக உள்ளதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி வெளியூரிலிருந்து காஞ்சிபுரம் வந்து தங்கியுள்ள கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர் இன்று நாள் மட்டும் அத்திவரதர் தரிசனத்துக்கு வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கடந்து இரண்டு நாட்களாக வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் அதிகமாகக் காணப்படுவதால், வண்டி, வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடமில்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மம்தானி மட்டுமல்ல... ஜே.டி. வான்ஸ் சகோதரரைத் தோற்கடித்த மற்றொரு இந்திய வம்சாவளி!

விலையோ குறைவு! ஆனால் தாவூத் இப்ராஹிம் சொத்துகளை ஏலம் எடுக்க ஆள் இல்லை!!

ம.பியில் ரயில்வே திட்டத்திற்காக வெட்டப்படும் 1.24 லட்சம் மரங்கள்!

“H FILES” ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல்காந்தி!

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

SCROLL FOR NEXT