செய்திகள்

திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் 25 முதல் திருவாடிப்பூர உற்சவம்

DIN


திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் ஜூலை 25-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை திருவாடிப்பூர உற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இக்கோயிலில் எழுந்தருளி உள்ள ஆண்டாள் நாச்சியாருக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தையொட்டி
இந்த உற்சவத்தை தேவஸ்தானம்  நடத்தி வருகிறது. அதன்படி வரும் 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை ஆண்டாள் நாச்சியாருக்கு திருவாடிப்பூர உற்சவம் நடைபெற உள்ளது. இந்த உற்சவ நாள்களில் ஆண்டாளுக்கு நாள்தோறும் காலையில் ஸ்நபன திருமஞ்சனமும், மாலை திருவீதிப் புறப்பாடும் நடைபெற உள்ளது. 
ஆகஸ்ட் 1ஆம் தேதி கோவிந்தராஜர் கோயிலில் சக்கரத்தாழ்வார் சாத்துமுறை, பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் சாத்துமுறை உள்ளிட்டவை நடைபெறும். ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதியம் உற்சவர்கள் அலிபிரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படும். அதன் பின் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு கோவிந்தராஜர் கோயிலை அடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT