செய்திகள்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனம்! 

DIN

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் சிறப்புத் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் வடபழனி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விமரிசையாக நடைபெறும். அந்தவகையில் இந்தாண்டு 26-ம் தேதி ஆடிக்கிருத்திகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்யச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலின் தெற்கு ராஜகோபுரம் எதிரில் பொது தரிசனத்திற்காக இரண்டு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

பக்தர்கள் வரிசையில் செல்லும் போதே அர்ச்சனை சீட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். சிறப்பு விரைவு தரிசனத்திற்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் வாசலில் அதிகாலை 4.00 மணி முதல் இரவு 11 மணி வரை சிறப்புத் தரிசனத்துக்கான நுழைவு சீட்டு பெற்றுக்கொள்ளலாம். 

மேலும், கோயிலுக்கு வந்து செல்ல மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT