செய்திகள்

ஆசையால் வரும் விளைவுகள்: ஜோதிட விளக்கம் (பகுதி -1)

ஆசை, சிலருக்கு பொருள் மீது ஆசை; சிலருக்குப் பெண் மீது ஆசை; வெகு சிலருக்கோ

ஜோதிடர் தையூர். சி. வே. லோகநாதன்

உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
தய்யடா தய்யடா தய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா 
மீச நரச்சி போன பின்னாலே ... 
ஆசை நரச்சி போய்விடுமா 
வயசு அதிகம் ஆன பின்னாலே 
மனசும் கிழமாய் மாறிடுமா 
 
பைசாவை கண்டா நைசாக பேச
பல ரக பெண்கள் வருவாங்க 
பக்கத்தில் வந்து.. பாடி ஆடி சுகம் தருவாங்க 
பட்டான மேனி ..பட்டான மேனி
பாத்தாலே இன்பம் 
மெய்யடா மெய்யடா மெய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா 
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா 
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ... 

திரைப்படம் : அலிபாபாவும் 40 திருடர்களும்
பாடியவர் : கண்டசாலா
இயற்றியவர் : மருதகாசி
திரையிசை : S.தக்ஷிணாமூர்த்தி

ஆசை, சிலருக்கு பொருள் மீது ஆசை; சிலருக்குப் பெண் மீது ஆசை; வெகு சிலருக்கோ கடவுள் மீது ஆசை. ஆசை என்பதை ஒரு போகமாகவே கருதவேண்டும். போகமும், காமமும் ஒன்றல்ல. சுக்கிரன் காம காரகன். இந்த போகத்துக்குக் காரகன் குரு ஆகும். சரி, இந்த குருவானவர் ஒவ்வொரு லக்கினத்திற்கும் எவ்வாறு போகத்தை / ஆசையை 
உண்டு பண்ணுவார் என்பதனை இக்கட்டுரை வாயிலாகக் காண்போம். 

மேஷ லக்கின காரர்களுக்கு

குரு லக்கினத்தில் இருப்பின், அது ஒரு அற்புதமான நிலை என்றே கூறலாம். காலபுருஷ சக்கரத்துக்கு 9 மற்றும் 12 ஆம் இடத்திற்குச் சொந்தமான இவர், அதாவது திரிகோண ஆதிபத்தியம் பெற்ற பாக்கியத்துக்கும், விரையாதிபத்யம் என்ற இரண்டு நிலைகளைப் பெற்றவர். எனவே விரையாதிபத்யம் செய்வதை மட்டுப்படுத்தி, நன்மைகளைச் செய்யவேண்டிய நிலைக்கு ஆளாகிறார். எனினும், சில பிரச்னைகளை, மேஷ லக்கினத்தில் அமரும் குரு அளிக்கவே செய்வார். குறிப்பாக 12-க்குரிய விரைய ஆதிபத்தியம் பெறும் இவர், கௌரவத்தை விட்டு கொடுக்காதவர் என்பதால், அதிகமாகச் செலவு செய்ய வைப்பார்.

நல்ல செலவு தான் என்றாலும், கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள, கடன்கள் வாங்கியும் செலவு செய்ய தயங்கமாட்டார் எனலாம். பெரும்பாலும் குடும்பத்துக்குச் செய்யவேண்டும் எனும் அக்கரை குறைவாகவே இருக்கும். சுயநலத்தை விட  பொது சேவைக்காகத் தான் அதிகம் செலவு செய்வார். மொத்தத்தில் புகழ் போதை அதிகம் கொண்டவர்கள். அதே சமயம், காம உணர்வு அதிகமாகவே இருக்க செய்யும். எனினும், அதனை மிகவும் சாமர்த்தியமாக வெளியில் தெரியாமல், பெண்கள் தொடர்பை வைத்திருப்பார்கள். பிராமண பெண்ணை விரும்புவார். அஸ்வினி 2, 3-ம் பாதத்திலும்; பரணி 3-ஆம் பாதத்திலும் குரு நின்றால், பகை நவாம்சம் பெற்று அற்ப பலன்களை அடைவார். 

ரிஷப லக்கின காரர்களுக்கு

குரு லக்கினத்தில் இருப்பின், பொதுவாக குருவானவர் லக்கினத்தில் இருப்பின் நல்லது. ஆனால், இந்த லக்கினகாரர்களுக்கு, 8 மற்றும் 11-ஆம் வீட்டுக்குரியவர் லக்கினத்தில் அமைவது, ஜாதகரின் உடம்பில் மறைந்துள்ள ரோகத்தால், துன்புறுபவராகவும், எதிர்பாராத விதத்தில் துன்பங்களை அடைபவராகவும் விளங்குவார். லாப அதிபர், லக்கினத்தில் இருப்பதால், நான்கு கால் பிராணிகளால், அந்நிய நாட்டுப் பிரபுக்களைச் சேவிப்பதாலும் அரச சேவையாலும், லாபங்களை அடைவார். பிராமண பெண்ணிடம் ஆசை கொள்வார். எடுத்த வேலையை முடிக்கும் திறமைசாலி. பித்ரு பாக்கியம் உடையவர். கிருத்திகை 2 ஆம் பாதமானால் நீச்சத்தன்மையையும் , ரோகிணி 2, 3 பாதங்களில் பகை தன்மையையும் அடைவதால், மறைவில் கெட்ட நடத்தை உடையவராகவும் , திடீரென்று அவப்பெயர் மற்றும் அவதூறு அடைபவராகவும் இருக்கச்செய்யும். 

மிதுன லக்கின காரர்களுக்கு

குரு லக்கினத்தில் இருப்பின்,  அதாவது, 7 மற்றும் 10 ஆம் வீட்டுக்குரியவர் லக்கினத்தில் அமைவது, ஜாதகருக்கு நன்மை செய்யக் கூடியவர் அல்ல . சுமாரான நன்மை பெறவாய்ப்பு..பெரும்பாலும் இவர்கள், தங்களின் மனைவியைச் சார்ந்தே வாழ்வார்கள். மிருகசீரிடம் -3, புனர்பூசம் -2 பாதங்களில் பகை நவாம்சமும் , திருவாதிரை 2ஆம் பாதத்தில் நீச்ச நவாம்சம் பெறுவதால், இந்த நட்சத்திர பாதத்தில் வீற்றிருக்கும் குருவானவர் கெடுதலையே செய்வார். பொதுவாக இந்த லக்கின காரர்களுக்கு குரு தசையில் நன்மை செய்வதில்லை. எனினும், சனி அல்லது சுக்கிரனுடன் இங்குச் சேர்ந்திருந்தால், குருவினால் உண்டாகக்கூடிய கெடுதல்கள் குறைவதோடு , அவரின் நிலைக்கேற்ப நன்மைகளை அளிக்கவேண்டி வரும்.

கடக லக்கின காரர்களுக்கு

குரு லக்கினத்தில் இருப்பின்,  அதாவது, 6 மற்றும் 9 ஆம் வீட்டுக்குரியவர் லக்கினத்தில் அமைவது, அதிலும் உச்ச நிலை பெறுவதால், மேலான பலன்களையே தருவார். பாக்கியாதிபதி லக்கினத்தில் அமர்வதென்பது மிகவும் பூர்வ புண்ணியமே. ஜாதகர் தெய்வபக்தி உள்ளவர். குறைவாகவே சாப்பிடுபவர். நல்ல ஞாபகசக்தி உடையவர். ஆனால் சொந்த ஜனங்களின் காட்டத்திற்குக் காரணமாய் இருப்பர். ஆயில்யம் 2 ல் நீச்ச நவாம்சமும் , பூசம் -3 ல் பகை நவாம்சமும் பெறுவதால், அவ்வளவாக நல்ல பலன்கள் கிட்டாது. எல்லா விஷயங்களும் சுபமாக முடிய குருவின் அனுக்கிரகம் தேவை. இந்த குருவானவர், காதலில் கூட ஆச்சாரம் அனுஷ்டானம் பார்த்துப் பழக காரணம் ஆகிறார். பெரிய, பிரமிக்கத் தக்க செயல் செய்பவர்களின் மீது காதல் வர குரு காரணம் ஆவார். பல பெண்கள் ஒரு ஆணை விரும்புவதும்; ஒரு பெண்ணை பல ஆண்கள் விரும்புவதும் குருவே முக்கிய காரணமாகிறார்.

இன்றைய சூழலில், ஆசையைப் பற்றி ஒரு கவிஞன் இவ்வாறு எழுதினான். அடங்காத ஆசையால் அழியுதே மானுடம் , ஆசையைத் தினம் சோறு போட்டு செழுமையாக்கி மனதுள் பேராசையாக வளர்ந்து வானுயர்ந்த அரக்கனாக ஆட்டி படைக்கிறதே.. காட்டுத் தீயாகப் பரவிக் கொழுந்துவிட்டு எரிகிறதே, போதும் என்ற தண்ணீர் யார் ஊற்றுவது அந்த நல்ல எண்ணம் எப்போது துளிர் விடும் . யார் அதை ஊற்றுவது, ஊற்றி யார் வளர்ப்பது பூனைக்கு யார் மணி கட்டுவது, அந்த நல்லதொரு தொற்று நோய் பரவினால் மானுடம் மீண்டும் ஒரு வேளை மீள வாய்ப்பு உண்டு ! அன்பு என்ற பூ மலர வாய்ப்பும் உண்டு!! 

இன்னல்களுக்கும் காரணம் ஆசை, அவசரம், தேர்ந்தெடுக்கும் திறமையைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகியவையே! புதிதாகச் சொந்த வீடு வாங்க ஆசைப்படு வதிலோ, அதைத் தவணை முறையில் வாங்கு வதிலோ ஒரு தவறும் இல்லை. ஆனால், எந்த ஒரு காரியத்தையும் தொலைநோக்குடன் ஆழ்ந்து யோசித்து, நல்லது கெட்டதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஆசைகள் நியாயமானவையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவற்றை அடையும் வழிமுறைகளும் நேர்மையானவையாக இருக்க வேண்டும்.

நூற்றுக்கணக்கான பன்மொழிச் சேனல்கள் அமைந்த ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில், நாம் விரும்பிய நிகழ்ச்சியைப் பார்க்க, ரிமோட் கன்ட்ரோல் மூலம் குறிப்பிட்ட ஒரு சேனலைத் தேர்ந்தெடுக்கிறோம். அதில் ஒளி - ஒலிகளை நாம் விரும்பியவண்ணம் ட்யூன் செய்கிறோம். இதேபோல, நாம் ஆசைப்படுவதை நியாயப்படுத்தி, அதற்கான வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து, நல்லது கெட்டதை ஆராய்ந்தறிந்து, சரியான ரிமோட் கன்ட்ரோல் மூலம் அதை முடிவு செய்தால் பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

சாயியைப் பணிவோம் எல்லா நலமும் பெறுவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன் 

தொடர்புக்கு: 98407 17857

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT