செய்திகள்

மாங்கல்ய பலம் வேண்டி பெண்கள் அனுஷ்டிக்கும் வடசாவித்திரி விரதம் இன்று!

தினமணி

பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டி வடசாவித்திரி விரதம் அனுஷ்டிக்கும் நாளாகும் இன்று. ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் ஆஷாட மாத பௌர்ணமியில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்குப் பூஜை செய்து சாவித்திரியை வழிபடும் நாள் இது. வடம் என்றால் கயிறு என்றும் பொருள். அமாங்க! நம்ம ஊரில் காரடையான் நோன்பு என அனுஷ்டிப்பதைத்தான் வட நாட்டில் "வட சாவித்திரி விரதம்" என அனுஷ்டிக்கின்றனர்.

வடசாவித்ரி விரதத்தின் சிறப்பு

வடசாவித்திரி விரதம் என்றவுடன் இது என்னவோ வட நாட்டினர் மட்டும் கொண்டாட வேண்டிய விரதம் என நினைத்துவிடாதீர்கள். வடம் என்றால் விழுது எனப் பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில் தான் இருக்கிறது. அதுபோல ஒரு பெண்ணின் பலம் அவளின் கணவனை பொருத்துதான் இருக்கிறது. இனிய கணவன் அமையவும் மாங்கல்ய பலம் பெருகவும் கன்னிப்பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆலமர விழுதுகளில் பூஜை செய்து அனுஷ்டிக்கும் தினமாகும்.

ஆண்டுதோறும் கோடைக்கால பௌர்ணமியில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்குப் பூஜை நடக்கும். சாவித்திரியை வழிபடும் நாள் இது. வட நாட்டுப் பெண்கள் விரதம் இருந்து ஆலமரப்பூக்களைச் சாப்பிடுவார்கள். ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் பௌர்ணமி அன்று பெண்கள் வழிபாடு நடத்தும் சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்குப் பூஜை நடக்கும்.

பெண்களுக்கு மாங்கல்ய பலம் அருளும் விரதம் இது. கணவரின் ஆரோக்கியமும் ஆயுளும் சிறக்க வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். கன்னிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, வழிபடுவதால், விரைவில் கல்யாண வரம் கைகூடும். மனதுக்கினிய கணவர் வாய்ப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT