செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம்: இன்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடக்கம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன மகோற்சவம் இன்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. 

DIN

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன மகோற்சவம் இன்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. 

ஆனி  பௌர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது ஆனித் திருமஞ்சனம் கொண்டாடுவார்கள். உத்திர நட்சத்திர நேரத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு ஆனி உத்திரம் என்று பெயர். 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உத்திர விழா வருகிற ஜூன் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று ஆனி உத்திர விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கித் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. 

விழாவின் ஒவ்வொரு நாளும் நடராஜருக்குச் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகிறது. ஜூலை 3-ல் தெருவடைச்சான் சப்பரத்தேரோட்டம், 7-ம் தேதி காலை மணிக்கு நடராஜர் தேரோட்டம், 8-ம் தேதி ஆனித் திருமஞ்சனமும் நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சன விழாவுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

நெப்பத்தூா் தீவுப் பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

சட்டைநாதா் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு

கொள்ளிடம் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT