செய்திகள்

பத்மாவதி பரிணய உற்சவம் நிறைவு

தினமணி


திருமலையில் நடந்து வந்த பத்மாவதி பரிணய உற்சவம் புதன்கிழமை நிறைவு பெற்றது. 
திருமலையில் ஆண்டுதோறும் ஏழுமலையான் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்ட வைபவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இந்த உற்சவத்தை தேவஸ்தானம் 3 நாட்கள் திருமலையில் வெகு விமரிசையாக நடத்தி வருகிறது. 
அதன்படி பத்மாவதி பரிணய உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. அதன் நிறைவு நாளான புதன்கிழமை மாலை மலையப்பஸ்வாமி கல்யாண கோலத்தில் கருட வாகனத்திலும், ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்கள் பல்லக்கிலும் கல்யாண மண்டபத்தை அடைந்தனர். 
அங்கு அவர்களுக்கு சிறப்பு ஆராதனைகள், பட்டு வஸ்திரம் சமர்ப்பணம், ஊஞ்சல் சேவை உள்ளிட்டவை நடத்தப்பட்டன. அதன்பின் இரவு உற்சவமூர்த்திகள் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயர்கள் கலந்து கொண்டனர். இதை முன்னிட்டு ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்தது.
 பத்மாவதி பரிணய உற்சவம் புதன்கிழமை நிறைவு பெற்றது. நிறைவு நாளன்று திருமலையில் வாண வேடிக்கை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் நடந்த சம்பவத்திற்கு பின் கோயில் விழாக்களில் வாண வேடிக்கை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததை முன்னிட்டு தேவஸ்தானம் அதை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

SCROLL FOR NEXT