முகப்பு
செய்திகள்

தேவி பட்டினம் நவபாஷாண கோயிலில் கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சம்!

ராமநாதபுரத்தில் தேவி பட்டினம் நவபாஷாண கோயிலில் கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:00 AM
பகிர்:

ராமநாதபுரத்தில் தேவி பட்டினம் நவபாஷாண கோயிலில் கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நவக்கிர தலங்களில் முக்கிய தலமாக தேவி பட்டினம் நவபாஷாண நவக்கிரக கோயில் விளங்குகிறது. கடலில் இந்த கோயில் அமைந்துள்ளதால் பரிகாரப்பூஜை, தர்ப்பணம், குழந்தை பாக்கியம் வேண்டுதல் எனப் பலரும் இத்தலத்திற்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்துக்கும் அதிகமான பக்தர்கள் தேவிப்பட்டினம் கடல் கோயிலில் கூடியிருந்தனர். இந்நிலையில்,நேற்று காலை முதல் கடல் திடீரென உள்வாங்கியது. இதனால், வழிபாடு செய்ய வந்த பக்தர்கள் அச்சமடைந்தனர். 

பொதுவாக கடல் உள்வாங்குவது இயல்பு தான், ஆனால் வழக்கத்தை விடக் கூடுதலாக உள்வாங்கிக் காணப்பட்டதாகப் பக்தர்கள் தெரிவித்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →