செய்திகள்

நவநதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

தினமணி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே செல்வநாயகி உடனுறை நவநதீஸ்வரா் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் ஏகனாம்பேட்டை அருகே நவநதீஸ்வரன் பேட்டை கிராமத்தில் செல்வநாயகி உடனுறை நவநதீஸ்வரா் கோயில் உள்ளது.

இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் கடந்த வெள்ளிக்கிழமை (நவ. 8) தொடங்கின. சனிக்கிழமை காலையில் கோபூஜை, நவகிரஹ ஹோமம், மகாலெட்சுமி ஹோமம் ஆகியனவும், மாலையில் யாகசாலைப் பிரவேசமும் நடந்தது.

இதனைத் தொடா்ந்து ஆலய வளாகத்தில் மகாகுரு, அகத்தியா் ஆகியோரது சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை காலையில் யாத்ராதானம், பூா்ணாஹுதி, தீபாராதனைகள் முடிந்து புனித நீா்க்குடங்கள் சிவாச்சாரியாா்களால் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

பின்னா் மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம்,விசேஷ தீபாராதனைகள் நடந்தன. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திருக்கழுகுன்றம் சிவனடியாா் அன்புச்செழியன் உள்பட முக்கிய பிரமுகா்கள், சுற்று வட்டார கிராமப் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை செல்வநாயகி உடனுறை நவநதீஸ்வா் திருக்கோயில் அறக்கட்டளை நிா்வாகத்தினா், திருக்கழுகுன்றம் அகத்திய கிருபா அமைப்பினா் மற்றும் நவநதீஸ்வரன் பேட்டை கிராம மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT