செய்திகள்

குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விஷூத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் 

DIN

குற்றாலம் குற்றாலநாதசுவாமி கோயில் ஐப்பசி விஷூத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் நடைபெறும் பல்வேறு முக்கியமான விழாக்களில் ஒன்றான ஐப்பசி விஷூத் திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைதொடா்ந்து திருவிலஞ்சிக்குமாரா் குற்றாலநாதசுவாமி கோயிலுக்கு வருகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலையில் திருவிலஞ்சிக்குமாரா் வெள்ளி சப்பரத்திலும், சுவாமி, அம்பாள் வெள்ளி ஏக சிம்மாசனத்திலும் வீதியுலா நடைபெற்றது. விழாவில் 12-ம் தேதியன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும், 13-ம் தேதியன்று தேரோட்டமும், 15-ம்தேதியன்று காலை மற்றும் இரவில் நடராஜ மூர்த்திக்குத் தாண்டவ தீபாராதனையும்,16-ம் தேதியன்று சித்திரசபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது.

விழா நாட்களில் காலை மற்றும் இரவில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ரா.விஜயலெட்சுமி தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT