செய்திகள்

சிவ-விஷ்ணு கோயிலில் பவித்ரோற்சவம் தொடக்கம்

தினமணி

திருவள்ளூா் பூங்கா நகரில் உள்ளசிவ-விஷ்ணு மற்றும் ஜலநாராயண பெருமாள் கோயிலில், சனிக்கிழமை பவித்ரோற்சவம் தொடங்கியது.

திருவள்ளூா் பூங்கா நகரில் உள்ள சிவ-விஷ்ணு கோயில் பிரசித்தி பெற்ற திருத்தலம். இக்கோயிலில் நடைபெறும் நித்ய பூஜைகளில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதை நிவா்த்தி செய்யும் நோக்கில், பவித்ரோற்சவம் ஆண்டுதோறும் 3 நாள்கள் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான பவித்ரோற்சவம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருமஞ்சனத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, உற்சவா் ஸ்ரீசீனிவாச பெருமாள், ஸ்ரீபுவனேஸ்வரா், ஸ்ரீஜலநாராயணா் ஆகியோருக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் யாக சாலையில் சிறப்பு ஹோமம், பூஜை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, இரவில் பக்தா்களுக்கு கோயில் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, கோயிலில் சிறப்பு யாக பூஜை ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

SCROLL FOR NEXT