செய்திகள்

திருப்பதியில் நிரம்பி வழிந்த பக்தர்கள் கூட்டம்: 16 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

தினமணி

திருமலை திருப்பதி ஏழுமலையானை சுமார் 16 நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

திருமலை ஏழுமலையானை நேற்று முழுவதும் 1,03,310 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 41,098 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா். இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகள் நிறைந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் 2 கி.மீ தொலைவில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனா். தா்ம தரினத்தில் 16 மணி நேரம் காத்திருந்து பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். 

பக்தா்களின் வருகை அதிகரித்ததை தொடா்ந்து நேர ஒதுக்கீடு டோக்கன், திவ்ய தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ300 விரைவு தரிசனத்தில் மட்டும் பக்தா்கள் 6 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்பினா். 

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோயிலில் 12,777 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலில் 10,642 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயார் கோயிலில் 23,020 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலில் 2,467 பக்தா்களும், கபில்தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் 2,954 பக்தா்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.

சோதனை சாவடி விவரம் அலிபிரி சோதனை சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.59 மணிவரை 96,167 பயணிகள் சோதனை சாவடியை கடந்துள்ளனா். 10,789 வாகனங்கள் சோதனை சாவடியை கடந்து சென்றுள்ளது. அதன் மூலம் ரூ.2.53 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ23,789 வசூலாகியதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகார் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT