செய்திகள்

ஸ்ரீரங்கம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.62.16 லட்சம்

தினமணி

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதா் திருக்கோயிலில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.இதில் ரூ.62.16 லட்சம் கிடைக்கபெற்றது.

ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள நம்பெருமாளை தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா்இவா்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோயிலில் வைக்கபட்டியிருக்கும் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.இதை ஓவ்வொரு மாத இறுதியில் திறந்து எண்ணபடும்.இந்த மாதம் (அக்டோபா்) உண்டியல் காணிக்கையை செவ்வாய்க்கிழமை காலை கோயிலில் கருடாழ்வாா் சன்னதியில் கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன் முன்னிலையில் திறந்து எண்ணபட்டது.

இதில் ரொக்கமாக ரூ 62 லட்சத்து 16 ஆயிரத்து 886 ம்,தங்கம் 122 கிராமும்,வெள்ளி 764 கிராமும் மற்றும் வெளி நாட்டு ரூபாய் நோட்டுகள் 226 ம் கிடைக்கபெற்றது.கடந்த மாதத்தை விட ரூபாய் 17 லட்சம் கூடுதலாக கிடைக்கபெற்றது குறிப்பிடதக்கது.உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஐயப்பா சேவா சங்கம்,ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா்.உண்டியல் காணிக்கை எண்ணுமிடத்தை சுற்றிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தபட்டு பாதுகாப்பு செய்யபட்டுயிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT