செய்திகள்

வரதராஜப் பெருமாள் திருக்கோயில் பவித்ரோற்சவம்

DIN


காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் பவித்ரோற்சவம்  தொடங்கியதை முன்னிட்டு வியாழக்கிழமை அங்குரார்ப்பணம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு தோறும்  பவித்ரோற்சவம் நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான  பவித்ரோற்சவம் வியாழக்கிழமை அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை 2 -ஆவது நாளாக பெருமாளுக்கும்,பெருந்தேவித் தாயாருக்கும் அதிவாசத்தை முன்னிட்டு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 
இதனையடுத்து மாலையில் பெருமாள் அத்திகிரி மலையிலிருந்து கோயில் தரைத்தளத்தில் உள்ள  கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சனிக்கிழமை முதல் வரும் 19-ஆம் தேதி வரை தினசரி காலையில் யாகசாலை பூஜைகளும்,உற்சவரான பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக திருவடி கோயிலுக்கு புறப்பாடும் நடைபெறுகிறது.
20-ஆம் தேதி பெருமாள் மாடவீதிகளில் புறப்பாடு நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT