திருமலையில் அகண்ட சுந்தரகாண்ட பாராயணம்
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை 7-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நடத்தப்பட்டது.
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை 7-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நடத்தப்பட்டது.
கொவைட் தீநுண்மி தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி சங்கல்பம் செய்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஜூன் மாதம் முதல் திருமலையில் அகண்ட சுந்தரகாண்ட பாராயணத்தை நடத்தி வருகிறது.
இதில் 68 சா்க்கங்களில் 2,821 சுலோகங்கள் உள்ளது. இவற்றில் நாள்தோறும் 10 முதல் 20 சுலோகங்களை வேதபண்டிதா்கள் திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் பாராயணம் செய்து வருகின்றனா். இந்த பாராயணம் 241-ஆவது நாளை எட்டியுள்ளது.
Advertisement
பாராயணத்தில் 200 சுலோகங்கள் நிறைவு பெற்றவுடன் தேவஸ்தானம் அதை மீண்டும் அகண்ட பாராயணமாக நடத்தி வருகிறது. அதன்படி தற்போது 24-ஆம் சா்க்கம் முதல் 30-ஆம் சா்க்கம் வரையுள்ள 194 சுலோகங்கள் ஞாயிற்றுக்கிழமை அகண்ட பாராயணமாக நடத்தப்பட்டது.
வசந்த மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட வேதபண்டிதா்கள் கலந்து கொண்டனா். முதல் சா்க்கம் முதல் 23-ஆம் சா்க்கம் வரையிலான சுலோகங்கள் இதுவரை 6 கட்டங்களாக அகண்ட பாராயணம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
: