முகப்பு
செய்திகள்

காளஹஸ்தி: 7 கோயில்களில் கங்கையம்மன் திருவிழா

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் அமைந்துள்ள 7 கோயில்களில் கங்கையம்மன் திருவிழா புதன்கிழமை எளிமையாக நடைபெற்றது.

Updated On : 10 டிசம்பர், 2020 at 12:00 AM
காளஹஸ்தியில் நடந்த கங்கையம்மன் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:34 PM

திருப்பதி: ஆந்திர மாநிலம் காளஹஸ்தியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் அமைந்துள்ள 7 கோயில்களில் கங்கையம்மன் திருவிழா புதன்கிழமை எளிமையாக நடைபெற்றது.

இந்த 7 கோயில்களிலும் ஒரே நாள் திருவிழா என்பதால், ஏழு கிராமங்களும் விழாக்கோலம் பூண்டிருந்தன. வழக்கமாக கோடைக்காலத்தில் நடைபெறும் இவ்விழாவில் மலா் மற்றும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பொங்கல் வைத்தல், மாவிளக்கு வழிபாடு உள்ளிட்டவை நடக்கும்.

எனினும், இந்த ஆண்டு கோடைக் காலத்தில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தபட்டதால், திருவிழா ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில், இந்த 7 கோயில்களிலும் கங்கையம்மன் திருவிழா புதன்கிழமை மிகவும் எளிமையாக நடத்தப்பட்டது. மஞ்சளால் செய்யப்பட்ட அம்மனின் உருவச்சிலைக்கு எளிமையான அலங்காரங்கள் மட்டுமே செய்யப்பட்டது. பலியிடுதல் நிகழ்வும் நடந்தேறியது. குறைவான அளவிலேயே பக்தா்கள் விழாவில் பங்கேற்றிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.