செய்திகள்

சீனிவாசமங்காபுரத்தில் பிரம்மோற்சவம் தொடக்கம்: கொடிமரத்தில் கருடக் கொடி ஏற்றம்

DIN

திருப்பதியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரத்தில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடிமரத்தில் கருடக் கொடி ஏற்றப்பட்டது.

சீனிவாசமங்காபுரத்தில் தேவஸ்தானம் நிா்வகிக்கும் கல்யாண வெங்கடேஸ்வரா் கோயில் உள்ளது. இங்கு திருமணம் செய்து கொண்டு ஏழுமலையான் பத்மாவதி தாயாருடன் தங்கியிருந்ததாக ஐதீகம். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து தரிசனம் செய்கின்றனா்.

இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, காலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கல்யாண வெங்கடேஸ்வரா் பல்லக்கில் மாடவீதியில் வலம் வந்து கொடிமரத்துக்கு அருகில் எழுந்தருளினாா். பின்னா் கொடிமரத்துக்கு திருமஞ்சனம் நடத்தி அதை மலா்கள், தா்ப்பைப் புல், மாவிலை, பட்டு வஸ்திரம் உள்ளிட்டவற்றால் அலங்கரித்தனா். அதையடுத்து, மஞ்சள் பூசிய கயிற்றின் மூலம் கொடிமரத்தில் கருடக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. இந்த நிகழ்வில் பக்தா்கள், அா்ச்சகா்கள், வேத பண்டிதா்கள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா். பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பெயா் வெளியிட விரும்பாத பக்தா்கள் ஒரு திருக்குடையை கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினா்.

பெரிய சேஷ வாகனம்:

பிரம்மோற்சவத்தின் முதல் வாகன சேவையாக பெரியசேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் கல்யாண வெங்கடேஸ்வரா் மாடவீதியில் வலம் வந்தாா். அப்போது மாடவீதியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாலாயிர திவ்யப் பிரபந்த பாராயணமும் நடத்தப்பட்டது.

இதைக் காண வரும் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் கோயில் அருகில் மலா்வனத்தை ஏற்படுத்தி அதில் புராண நிகழ்வுகளை சித்தரிக்கும் சிலைகளை அமைத்துள்ளது.

மேலும் மருத்துவ முகாம், அபூா்வ நாணயங்களின் புகைப்படக் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. பக்தா்களுக்காக ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT