செய்திகள்

மும்பை சித்தி விநாயகர் கோயிலுக்கு 35 கிலோ தங்கம் காணிக்கை!

தினமணி

மும்பையிலுள்ள பிரபலமான சித்தி விநாயகர் கோயிலுக்கு பக்தர் ஒருவர் 35 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

நாட்டிலேயே திருப்பதிக்கு அடுத்தபடியாக பிரபலமான அதே சமயம் ரொக்கம், நவரத்தினம், தங்கம், வெள்ளி என அதிக காணிக்கை பெறும் கோயில்களில் ஒன்றாக திகழ்வது மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி வநாயகர் கோயில். 

கடந்த வாரம் சித்தி விநாயகர் கோயிலுக்கு தில்லியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.14 கோடி மதிப்புள்ள 35 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். இதன்மூலம் சன்னதியின் மேற்பகுதி, கதவுகள் உள்ளிட்டவற்றுக்கு தங்கக் கவசம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் அதேஷ் பந்தேகர் உறுதிபடுத்தினார். இருப்பினும் காணிக்கை வழங்கிய பக்தரின் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார். ஜனவரி 15 முதல் 19 வரை புணரமைப்புப் பணிகள் காரணமாக கோயில் மூடப்பட்டு தங்கக் கவசம் மற்றும் விநாயகருக்கு காவி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு வரை கோயிலுக்கு ரூ.320 கோடி காணிக்கை வந்தடைந்துள்ளது. அது தற்போது ரூ.410 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஏழ்மையில் உள்ள எளிய மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்பட்டு வருகின்றன. இதுவரை 20 ஆயிரம் பேர் இதில் பலனடைந்துள்ளனர். இதில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வரையிலான நலத்திட்ட உதவிகள் செய்ததன் வகையில் ரூ.38 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று அதேஷ் பந்தேகர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

உன் பார்வையில்..

இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

SCROLL FOR NEXT