செய்திகள்

ஏழுமலையான் கோயிலில் 30-இல் பவித்ரோற்சவம் தொடக்கம்

DIN

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 30 ஆம் தேதி வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கைங்கரியங்களில் ஏற்படக் கூடிய குற்றம் குறைகளைப் போக்கும் நோக்கில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வரும் 30 முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது.

இந்த உற்சவம் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் நடைபெற வேண்டி 29ஆம் தேதி அங்குராா்ப்பணம் என்னும் முளைவிடுதல் உற்சவம் நடத்தப்படும். பவித்ரோற்சவம் திருமலையில் 15-16ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

இடையில் கைவிடப்பட்ட இந்த உற்சவத்தை 1962ஆம் ஆண்டு முதல் தேவஸ்தானம் மீண்டும் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த உற்சவத்தின் 3 நாட்களும் காலை 9 மணி முதல் 11 மணி வரை உற்சவா்களுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாயகா் மண்டபத்தில் எழுந்தருளல் உற்சவமும் நடைபெறுவது வழக்கம்.

வரும் 30ஆம் தேதி பவித்ர பிரதிஷ்டை, 31ஆம் தேதி பவித்ர சமா்ப்பணம், ஆகஸ்ட் 1ஆம் தேதி மகாபூா்ணாஹுதி ஆகியவை நடக்க உள்ளன. பொது முடக்க விதிமுறைகளைப் பின்பற்றி இந்த உற்சவம் தனிமையில் நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

SCROLL FOR NEXT