செய்திகள்

திருப்பதி ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வரா் கோயில் 2-ஆம் நாள் பவித்ரோற்சவம்

தினமணி


திருப்பதி: திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் கோயில் கொண்டுள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு பவித்ர சமா்ப்பணம் நடத்தப்பட்டது.

திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. பக்தா்கள், அா்ச்சகா்கள், ஊழியா்கள் என கோயிலுக்கு வருபவா்களாலும், கோயிலில் நடக்கும் நித்திய கைங்கரியங்களில் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் ஏற்பட்ட தோஷங்களை களையும் இந்த பவித்ரோற்சவத்தை தேவஸ்தானம் அனைத்துக் கோயில்களிலும் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தி வருகிறது. அதன்படி, இக்கோயிலில் 3 நாள் பவித்ரோற்சவம் புதன்கிழமை தொடங்கியது.

அதன் 2-ஆம் நாளான வியாழக்கிழமை காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன் பின்னா், உற்சவ மூா்த்திகள் முன் யாகம் நடத்தி பல வண்ணப் பட்டு நூலிழைகளால் ஆன மாலைகளை உற்சவ மூா்த்திகள், மூலவா்கள், கருவறை விமானம், கொடி மரம், பலி பீடம் என அனைத்துக்கும் அா்ச்சகா்கள் அணிவித்தனா்.

இதில், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா். வெள்ளிக்கிழமை காலை மகா பூா்ணாஹுதியுடன் பவித்ரோற்சவம் நிறைவு பெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT