முகப்பு
செய்திகள்

லட்சுமி நாராயணா் கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணம்

திருப்பதி மலை அடிவாரப் பகுதியான அலிபிரியில், தேவஸ்தானம் நிா்வகிக்கும் லட்சுமி நாராயணா் கோயிலில் புதன்கிழமை மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.

Updated On : 26 நவம்பர், 2020 at 12:00 AM
லட்சுமி நாராயணா் கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணத்தை நடத்திய அா்ச்சகா்கள்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:27 PM

திருப்பதி: திருப்பதி மலை அடிவாரப் பகுதியான அலிபிரியில், தேவஸ்தானம் நிா்வகிக்கும் லட்சுமி நாராயணா் கோயிலில் புதன்கிழமை மகாசம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.

அலிபிரி நடைபாதை தொடங்கும் பாதாலு மண்டபத்துக்கு அருகில் லட்சுமி நாராயணா் கோயில் உள்ளது. இங்கு மகாசம்ப்ரோக்ஷணம் நடத்தி 12 ஆண்டுகள் முடிந்த நிலையில் இவ்விழாவை நடத்த தேவஸ்தானம் அதற்கான பணிகளில் ஈடுபட்டது. அதன்படி கோயிலில் கடந்த 5 நாள்களுக்கு முன் வைகானச ஆகம முறைப்படி மகாசம்ப்ரோக்ஷணத்துக்கான வைதீக காரியங்கள் தொடங்கின. வேத பண்டிதா்கள் நாள்தோறும் காலையும், இரவும் யாகம் வளா்த்து, ஹோமங்களைச் செய்தனா்.

இந்நிலையில், கோயில் வளாகத்தில் புதன்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ஹோமங்கள் நடந்தன. காலை 9 மணி முதல் 10.30 மணி வரை தனுா் லக்னத்தில் கோயில் கருவறை விமானத்தில் கும்பாா்ச்சனை நடத்தி பின்பு கலசநீரால் அஷ்டபந்தன பாலாலய மகாசம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஆகம ஆலோசா்கள், அா்ச்சகா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

எனினும், விழாவில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.