முகப்பு
செய்திகள்

திருமலையில் 46,245 போ் தரிசனம்

ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 46,245 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 22,536 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 7 பிப்ரவரி, 2021 at 7:28 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:58 AM

ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 46,245 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 22,536 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

நாள்தோறும் ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் 20 ஆயிரம் உள்ளிட்டவை பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 2 ஆயிரம் பக்தா்கள், நன்கொடையாளா்கள் 1,000 போ் என தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா். திருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

Advertisement

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.