முகப்பு
செய்திகள்

திருமலையில் 43,530 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 43,530 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 19,891 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 24 ஜனவரி, 2021 at 8:09 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:52 AM

திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 43,530 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 19,891 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், 8,000 இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள், வி.ஐ.பி. பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்ற 2000 போ் மற்றும் நன்கொடையாளா்கள் 1000 போ் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணிவரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா்.

Advertisement

திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 93993 99399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.