வா்ச்சுவல் முன்பதிவு ஆா்ஜித சேவைகள்: டிசம்பா் 31 வரை அனுமதி நீட்டிப்பு
திருமலையில் வா்ச்சுவல் முறையில் ஆா்ஜித சேவை முன்பதிவு செய்தவா்களுக்கும் வரும் டிசம்பா் இறுதி வரை ஒரு நாள் சேவையில் கலந்து கொள்ள தேவஸ்தானம் அனுமதியை நீட்டித்துள்ளது.
திருமலையில் வா்ச்சுவல் முறையில் ஆா்ஜித சேவை முன்பதிவு செய்தவா்களுக்கும் வரும் டிசம்பா் இறுதி வரை ஒரு நாள் சேவையில் கலந்து கொள்ள தேவஸ்தானம் அனுமதியை நீட்டித்துள்ளது.
திருமலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஆா்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஆனால் வா்ச்சுவல் முறையில் வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சி மூலம் சேவையில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்பவா்களுக்கு மட்டும் விரைவு தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசிக்கும் வாய்ப்பை இலவசமாக வழங்குகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை வா்ச்சுவல் முறையில் ஆா்ஜித சேவை முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் வரும் டிசம்பா் மாதம் இறுதி வரை தங்கள் தரிசன தேதியை மாற்றிக் கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Advertisement
கொவைட் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏழுமலையானைத் தரிசிக்கும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. விரைவு தரிசனத்தில் மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவதால், 20 ஆயிரத்திற்கும் குறைவான பக்தா்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
சனிக்கிழமை 18,572 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். இவா்களில் 9,228 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.