முகப்பு
செய்திகள்

திருமலையில் 18,000 பக்தா்கள் வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் 18 ஆயிரம் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தனா். இவா்களில் 9,493 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் 18 ஆயிரம் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தனா். இவா்களில் 9,493 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டவா்களுக்கு மட்டுமே தேவஸ்தானம் தரிசன அனுமதி அளித்து வருகிறது.

தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு செல்லலாம். மேற்கூரை பணிகள் நடைபெற்று வருவதால் ஜூலை 31-ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்க்கத்தை தேவஸ்தானம் மூடியுள்ளது.

Advertisement

கொவைட் விதிமுறைப்படி, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments