செய்திகள்

திருமலையில் 19,837 பக்தா்கள் தரிசனம்

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் 19,837 பக்தா்கள் வியாழக்கிழமை தரிசனம் செய்தனா். இவா்களில் 8,067 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்களுக்கு மட்டுமே தேவஸ்தானம் தரிசன அனுமதி அளித்து வருகிறது.

தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்குச் செல்லலாம்.

திருமலைக்கு வரும் பக்தா்கள் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 93993 99399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT