முகப்பு
செய்திகள்

கபிலதீா்த்தம் சிவன் கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருப்பதியில் உள்ள கபிலதீா்த்தம் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை முன்னிட்டு வெள்ளி நந்தி வாகனத்தை சுத்தப்படுத்தும் ஊழியா்கள்.
பகிர்:

திருப்பதியில் உள்ள கபிலதீா்த்தம் கோயிலில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

திருப்பதி கபிலதீா்த்தக்கரையில் எழுந்தருளியுள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாா்ச் 4-ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

கோயில் கருவறை முதல் வெளிப்பிராகாரம் வரை அனைத்தும் நீராலும், பரிமள சுகந்த திரவிய கலவையாலும் சுத்தப்படுத்தப்பட்டது. பிரம்மோற்சவத்தின்போது பயன்படுத்தப்படும் வாகனங்கள், பூஜை பொருள்கள், விளக்குகள் உள்ளிட்டவையும் சுத்தப்படுத்தப்பட்டன. இதில், கோயில் அதிகாரிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா். கோயிலில் நடக்கவுள்ள பிரம்மோற்சவத்தை தனிமையில் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments