கவர்ச்சி மக்களைத் திரட்ட மட்டுமே உதவும்! விஜய் குறித்து பாஜக தேசிய தலைவர்!
தவெக தலைவர் விஜய் குறித்து பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் பேசியது பற்றி...
கவர்ச்சி மக்களைத் திரட்டவும், ஒன்றிணைக்கவும் மட்டுமே உதவும், ஆனால் களத்தில் இறங்கினால் மட்டுமே நிலைத்தன்மை கைகூடும் என்று விஜய் பற்றிய கேள்விக்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் பதிலளித்துள்ளார்.
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றில், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி இருக்கும் நிலையில், மீதமுள்ள மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரப் பணியாற்றி வருகின்றது.
இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு நிதின் நவீன் அளித்த நேர்காணலில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
“தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமையும். மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. போட்டியிடாததில் அண்ணாமலைக்கு துளியும் வருத்தமில்லை. தமிழ்நாட்டில் அதிமுகதான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை ஏற்றுள்ளது.
விஜய் முதல்முறையாக அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். ஆனால், அரசியலில் ஒருவர் முழுநேரமும் உழைக்க வேண்டியது அவசியம். விஜய் பற்றி இப்போதே கருத்து கூறுவது சரியாக இருக்காது.
கவர்ச்சி என்பது மக்களைத் திரட்டவும், ஒன்றிணைக்கவும் உதவும், ஆனால், களத்தில் இறங்கி அவர் நேரத்தைச் செலவிடும்போது மட்டுமே உண்மையான நிலைத்தன்மை கைகூடும். நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
BJP National Leader Nitin Nabin about TVK Leader Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.