FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்க ராகுலுக்கு தார்மீக உரிமை உள்ளதா? நிதின் நவீன்

வெளிநாட்டுக் கருவிகளால் ராகுல் காந்தி இயக்கப்படுகிறார்.. நிதின் நவீன் குற்றச்சாட்டு

பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன்... - ENS
பகிர்:

பிரதமர் மோடியுடன் விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெளிநாட்டுக் கருவிகளால் இயக்கப்படுகிறார் நாட்டை குழப்பத்தில் தள்ள விரும்புகிறார் என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோரக்பூரில் நடைபெற்ற ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை ஒழிப்போம் பேரணியில் உரையாற்றிய பாஜக தலைவர் பேசியதாவது,

பிரதமர் மோடியிடம் விளக்கும் கேட்கும் தார்மீக உரிமை ராகுல் காந்திக்கு உள்ளதா என்று அவர் கேள்வி எழுப்பினார். அமேதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் பாஜகவால் மேற்கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்க உங்களுக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது? உங்களுக்குப் பதில் அளிக்கும் அளவுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? அமேதியில் வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கலை யாராவது நாட்டியிருந்தால் அது பாஜக அரசும், பாஜக தலைவர்களும்தான்.

எஸ்ஐஆர் காரணத்தால்தான் தாங்கள் தேர்தலில் தோல்வியடைந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி களத்தில், கட்சித் தொண்டர்களுடனும் இணைந்து பணியாற்றியிருந்தால், நாட்டில் இத்தகைய மோசமான தேர்தல் சூழலை அவர்கள் எதிர்கொண்டிருக்க வேண்டியிருந்திருக்காது. சுதந்திரம் என்ற போர்வையில் நாட்டில் தங்களால் இயன்றவரை அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயன்றவர்கள் இவர்கள்தான்.

வறுமையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தவர்கள், அதைச் செய்யத் தவறியது மட்டுமல்லாமல், ஏழைகளை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளினர். ஆனால், பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் தலைமையின் கீழ், நாடும் உத்தரப் பிரதேச மாநிலமும் முன்னேற்றப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றன.

தில்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி நடத்திய பிரம்மாண்ட பேரணியில், அவர்கள் எதிர்பார்த்த மக்கள் கூட்டத்தில் 10 சதவீதத்தைக் கூட அவர்களால் திரட்ட முடியவில்லை. இதற்கு மாறாக பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சியான என்டிஏவும் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவொரு நகரத்திலும் மிகப்பெரிய பேரணிகளை நடத்தி வருகின்றன. இந்தப் பேரணிகள் ஆளும் கூட்டணியின் வலிமையையும், மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.