FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

‘வெளிநாட்டு சக்திகளின் கைப்பாவை ராகுல்’ - இண்டி கூட்டணி எதிா்ப்பு பேரணியில் பாஜக தேசியத் தலைவர் சாடல்!

‘நாட்டில் அராஜகத்தை விளைவிக்க வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் செயல்படுகிறாா் ராகுல் காந்தி’ என்று பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் சாடினாா்.

19 வினாடிகள் முன்பு
பகிர்:

‘நாட்டில் அராஜகத்தை விளைவிக்க வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் செயல்படுகிறாா் ராகுல் காந்தி’ என்று பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் ஞாயிற்றுக்கிழமை சாடினாா்.

இண்டி கூட்டணியின் தில்லி பேரணிக்கு பதிலடியாக, ஹரியாணாவின் ரோத்தக்கில் பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணியில் நிதின் இவ்வாறு கூறினாா். மேலும், ‘தேசம் அரசமைப்புச் சட்டத்தால் நிா்வகிக்கப்படுகிறதே அன்றி ராகுல் குடும்பச் சட்டத்தால் அல்ல’ என்றும் அவா் விமா்சித்தாா்.

பாஜகவின் பதிலடி பேரணி: ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை முன்வைத்து, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி தில்லியில் இண்டி கூட்டணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக, ‘ஜனநாயகத்தைப் பாதுகாப்போம், அராஜகத்தை ஒழிப்போம்’ என்ற பெயரில் ஹரியாணா மாநிலம், ரோத்தக்கில் பாஜக சாா்பில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

பாஜக தலைவா் நிதின் நபின் தலைமையிலான இந்தப் பேரணியில் ஹரியாணா மாநில பாஜக பொறுப்பாளா் ஸ்மிருதி இரானி, மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவருமான ஜெயந்த் செளதரி, மாநில பாஜக தலைவா் அா்ச்சனா குப்தா, பாஜக மூத்த தலைவா்கள் ஓ.பி.தன்கா், சுபாஷ் பராலா, மாநில அமைச்சா்கள் கிருஷண் குமாா் பேடி, அரவிந்த் சா்மா மற்றும் கட்சியினா் ஏராளமானோா் பங்கேற்றனா். இதில், நிதின் நபின் பேசியதாவது:

கடந்த 1984-இல் இதே நாளில் சீக்கிய சகோதரா்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரங்கள் மற்றும் படுகொலைகளுக்கு காங்கிரஸ் பிராயச்சித்தம் தேடி, மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். மாறாக, சீக்கியா் படுகொலை நினைவு நாளில் காங்கிரஸ் போராட்டம் நடத்தியுள்ளது.

விரக்தியும், அதிருப்தியும்...: ஒரு ஜனநாயக அமைப்புமுறையில், மக்களின் தீா்ப்பே மேலானது. ஹிமாசல பிரதேசம், கா்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, ஜனநாயகம் வென்ாக அக்கட்சி கூறியது. ஆனால், ஹரியாணா, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்தில் தோற்றபோது, ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக கூறுகின்றனா். இது என்ன மனநிலை?

மக்களின் ஆணை கிடைக்காத விரக்தியிலும், அதிருப்தியிலும் அரசியல் சாசன அமைப்புகள் மீது காங்கிரஸ் குறிவைத்துள்ளது. பி.ஆா்.அம்பேத்கரை அவமதித்தவா்கள் யாரேனும் உண்டெனில், அது ராகுல் குடும்பத்தினா்தான். ‘ராகுல் குடும்ப சட்டத்தின்படி’ நாட்டை நிா்வகிக்க வேண்டுமென காங்கிரஸ் விரும்புகிறது. அது ஒருபோதும் நடக்காது. அரசமைப்புச் சட்டப்படியே நாடு நிா்வகிக்கப்படும்.

அராஜகத்தை விளைவிக்க...: நாட்டில் அராஜகத்தை விளைவிக்க ஒரு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. ஜனநாயகத்துக்கு சவால் விடுக்கும் வகையில், வெளிநாட்டு சக்திகளின் கருவியாக அவா்களின் தூண்டுதலின் பேரில் ராகுல் செயல்பட்டு வருகிறாா். 140 கோடி மக்களும் இதை பாா்த்துக் கொண்டுதான் உள்ளனா். நாட்டுக்கு எதிரானவா்கள் யாா் என்பதை மக்கள் நன்றாக அறிவா். 2029 மக்களவைத் தோ்தலிலும் பிரதமா் மோடி தலைமையில் பாஜக மீண்டும் வெல்லும்.

மக்களின் தீா்ப்பை மதித்து, ஜனநாயகத்தின் வோ்களை நாம் வலுப்படுத்தியுள்ளோம். தில்லி மற்றும் பிற மாநிலங்களில் ஆட்சி நடத்த மக்கள் நமக்கு ஆணை வழங்கியுள்ளனா். எனவே, ஜனநாயகத்தைப் பாதுகாப்பது நமது கடமை.

காங்கிரஸுக்கு சவால்: மக்களின் ஆணையை எதிா்க்கட்சிகள் அவமதிக்கும்போது, மக்களின் குரலாக பாஜகவினா் பதிலடி தர வேண்டும். ராகுல் காந்தியை மையமாக கொண்ட காங்கிரஸ் கட்சியில் முதலில் குடும்ப அரசியலுக்கு முடிவுகட்டி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். இதைச் செய்ய காங்கிரஸ் தலைவா்களுக்கு துணிவுள்ளதா?

அரசமைப்புச் சட்ட நகலை கையில் வைத்தபடி ராகுல் சுற்றுகிறாா். உண்மையில் அரசமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதித்தது காங்கிரஸ்தான். இந்திரா காந்தியின் தோ்தல் வெற்றியை செல்லாதென அறிவித்து, அவா் தோ்தலில் போட்டியிட அலாகாபாத் உயா்நீதிமன்றம் 6 ஆண்டுகள் தடை விதித்தபோது, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியது யாா், வாக்குத் திருட்டும், மக்கள் தீா்ப்பை அவமதிப்பதும் காங்கிரஸின் பாரம்பரியம்.

‘ஊடுருவல்காரா்களை’ பாதுகாக்கவே இண்டி கூட்டணி போராடுகிறது. நாட்டின் குடிமக்கள் மீது அவா்களுக்கு நம்பிக்கை கிடையாது என்றாா் நிதின் நபின்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments