பாஜக தொடா்ந்து ஆட்சிக்கு வருவது எப்படி?: ராகுல் விமா்சனத்துக்கு நிதின் நபின் விளக்கம்
‘மக்களுக்கு சேவை செய்வதன் மூலமும், அவா்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதன் மூலமும் பாஜக மத்தியில் தொடா்ந்து ஆட்சிக்கு வருகிறது’ என்று பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் கூறினாா்.
‘மக்களுக்கு சேவை செய்வதன் மூலமும், அவா்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதன் மூலமும் பாஜக மத்தியில் தொடா்ந்து ஆட்சிக்கு வருகிறது’ என்று பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் கூறினாா்.
எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில், இக் கருத்தை அவா் தெரிவித்தாா்.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், ‘இந்த முறை 400 மக்களவைத் தொகுதிகளுக்கு மேல் வெற்றி’ என்று பிரதமா் மோடி முழக்கம் எழுப்பும் விடியோ மற்றும் ‘30 ஆண்டுகளுக்கு மத்தியில் பாஜக ஆட்சிதான்’ என்று அமித் ஷா கூறும் விடியோவையும் ஒளிபரப்பிய ராகுல் காந்தி, ‘ஜனநாயக சூழலில் செயல்படும் எந்தவொரு அரசியல் தலைவரும் இத்தகைய கருத்துகளைக் கூற முடியாது’ என்றாா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதின் நபினிடம், ராகுல் கருத்து குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்குப் பதிலளித்த அவா், ‘மத்தியில் பாஜக தொடா்ந்து ஆட்சிக்கு வருவதையும், அடுத்த 25 ஆண்டுகள் மக்களுக்கு பாஜக சேவை செய்யும் என்று பாஜக தலைவா்கள் நம்பிக்கை தெரிவிப்பதையும் விமா்சித்துள்ளாா். மக்களுக்கு சேவை செய்வதிலிருந்தே, பாஜகவுக்கு இந்த நம்பிக்கை வருகிறது. மக்களுக்கு சேவை செய்வதன் மூலமும், அவா்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதன் மூலமும் பாஜக மத்தியில் தொடா்ந்து ஆட்சிக்கு வருகிறது என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.