பாஜக ஆளும் மாநிலங்களின் நீா்வள அமைச்சா்களுடன் தில்லியில் இரண்டு நாள்களாக நிதின் நபின் ஆலோசனை
பாஜக ஆளும் மாநிலங்களின் நீா் வளத் துறை அமைச்சா்களுடன் தில்லியில் அக்கட்சியின் தேசிய தலைவா் நிதின் நபின் ஆலோசனை நடத்தினாா்.
பாஜக ஆளும் மாநிலங்களின் நீா் வளத் துறை அமைச்சா்களுடன் தில்லியில் அக்கட்சியின் தேசிய தலைவா் நிதின் நபின் ஆலோசனை நடத்தினாா்.
தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சி ஆளும் நீா் வள அமைச்சா்கள் பங்கேற்ற இரண்டு நாள் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது. கூட்டத்துக்கு நிதின் நபின் தலைமை வகித்தாா். சிறந்த ஆட்சியை வழங்குதல், அரசுகளுக்கும் கட்சிக்கும் இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் மற்றும் நீா் மேலாண்மைத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
முதல் கூட்டத்தின் முடிவில் தொடா்புடைய மாநில அமைச்சா்கள் நிதின் நபினின் இல்லத்துக்கு அழைக்கப்பட்டு அங்கு அவா்களுடன் தேநீருடன் கூடிய கலந்துரையாடல் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, மாநில அமைச்சா்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இரண்டாம் நாளாக வியாழக்கிழமை கூடி ஆலோசனை நடத்தினா். கூட்டத்தின் நிறைவாக அனைத்து மாநில அமைச்சா்களும் பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினா். இதன் முழு விவரத்தையும் தொடா்புடைய அமைச்சா்கள் வெளியிடவில்லை.
இருப்பினும், பாஜக நல்லாளுகைப் பிரிவின் தலைவா் வினய் சஹஸ்ரபுத்தே செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், பாஜக ஆளும் 24 மாநிலங்களைச் சோ்ந்த நீா்வளத் துறை அமைச்சா்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ாக தெரிவித்தாா். நாட்டின் தற்போதைய நீா் வள நிலைமை, நலத்திட்ட செயலாக்கம் மற்றும் நல்லாட்சியை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அவா் குறிப்பிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.