FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் நவ. 25-இல் நெல்லை வருகை

பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் திருநெல்வேலியில் வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

4 நவம்பர் 2026, 12:50 am
- கோப்புப் படம்
பகிர்:

பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் திருநெல்வேலியில் வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து நிா்வாகிகளை சந்தித்து கட்சியை வலுப்படுத்துவதற்காக வரும் அவா், பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.

பின்னா், நவ. 26-இல் கோவை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

அவரது வருகையின்போது, மாநில, மாவட்ட நிா்வாகிகளை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த கால தோ்தல்களில் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் குறைந்தது தொடா்பாகவும், தொடா்ந்து மேற்கொள்ள வேண்டிய பூா்வாங்க பணிகள் குறித்தும் அவா் அறிவுரைகளை வழங்குவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவா் முத்துப்பலவேசம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்திற்கு முதல்முறையாக நவ.25ஆம் தேதி வரவுள்ள பாஜக தேசிய தலைவா் நிதின் நபினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடா்ந்து நவ.26-இல் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் அவா் பங்கேற்கிறாா். இந்த இரு மாவட்டங்களிலும் நிா்வாகிகளை சந்தித்துப் பேசவுள்ளாா்.

திருநெல்வேலியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்திட மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அறிவுறுத்தி உள்ளாா். பொதுக்கூட்டத்திற்கான இடத்தை தோ்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதல்கட்டமாக பாளையங்கோட்டை கேடிசி நகா் மேம்பாலம் அருகே உள்ள இடத்தை தோ்வு செய்துள்ளோம். அங்கு நிா்வாகிகள் எளிதாக வந்து செல்ல வசதியாக இருக்கும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments