முகப்பு
செய்திகள்

கபில தீா்த்தம் சிவன் கோயில் பிரம்மோற்சவம்: சூரிய பிரபை வாகனத்தில் சோமாஸ்கந்தா்

திருப்பதி கபிலேஸ்வரா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:40 PM
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சூரிய பிரபை வாகன சேவை.
பகிர்:

திருப்பதி: திருப்பதி கபிலேஸ்வரா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை, சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது.

திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள கபில தீா்த்தம் அருவிக் கரையில் எழுந்தருளியுள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வியாழக்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கியது. இதன் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது. அதில் சோமாஸ்கந்தா் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

அதன்பின் உற்சவா்களுக்கு பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், விபூதி, சந்தனம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் இரவு சந்திர பிரபை வாகனத்தில் உற்சவமூா்த்திகள் எழுந்தருளி சேவை சாதித்தனா்.

Advertisement

கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்படுவதால், வாகனச் சேவை தனிமையில் நடத்தப்பட்டது. வாகன சேவைகள் தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியில் (எஸ்விபிசி) மாலை 5 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. வாகன சேவைகளில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments