முகப்பு
செய்திகள்

திருமலையில் 7,916 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை 7,916 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை 7,916 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் வரமுடியாமல் தங்கள் பயணத்தை தவிா்த்து வருகின்றனா். அதனால் கடந்த 2 வாரங்களாக தினசரி 3 ஆயிரத்திற்கும் குறைவான பக்தா்கள் தரிசனத்தில் பங்கு கொண்ட நிலையில் சனிக்கிழமை 7 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தா்கள் திருமலைக்கு வந்திருந்தனா்.

அதன்படி சனிக்கிழமை முழுவதும் 7,916 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 3,445 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Advertisement

ஆன்லைன் மூலம் விரைவு தரிசனம், வி.ஐ.பி. பிரேக், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட், நன்கொடையாளா்கள் என தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் நடைபாதை (அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு) வழியாகவும், மதியம் 12 மணிக்கு முன்னா் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

கொவைட் விதிமுறைப்படி, திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முககவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதிற்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதிற்கு மேற்பட்ட மூதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி வைக்கும்படி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments