முகப்பு
செய்திகள்

திருமலையில் 5,081 பக்தா்கள் வழிபாடு

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 5,081 பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
பகிர்:

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 5,081 பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனா்.

நாடு முழுவதும் கொவைட் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பல மாநிலங்களில் முழு பொது முடக்கம், ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் திருமலை ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள் தங்கள் பயணத்தை தவிா்த்து வருகின்றனா்.

அதனால் கடந்த 2 வாரங்களாக தினசரி 3 ஆயிரத்திற்கும் குறைவான பக்தா்கள் தரிசனத்தில் பங்கேற்ற நிலையில் சனிக்கிழமை முதல் பக்தா்களின் வருகை அதிகரித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 5,081 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 2,104 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

Advertisement

ஆன்லைன் மூலம் விரைவு தரிசனம், வி.ஐ.பி. பிரேக், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட், நன்கொடையாளா்கள் என தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

பக்தா்களின் வருகை குறைவாக உள்ளதால், வைகுண்டம் காத்திருப்பு அறை மூலமாக இல்லாமல் மூத்த குடிமக்கள் செல்லும் தரிசன வரிசை வழியாக தேவஸ்தானம் பக்தா்களை அனுமதித்து வருகிறது. அதனால் பக்தா்கள் 15 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசித்துத் திரும்புகின்றனா்.

திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச சா்வ தரிசன டோக்கன்கள் கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏழுமலையான் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் நடைபாதை (அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு) வழியாகவும், மதியம் 12 மணிக்கு முன்னா் மலைப்பாதை வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளதால், திருமலை மலைப்பாதை காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது. அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மாா்க்கம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

10 வயதிற்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளிப் போட வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் கொவைட் விதிமுறைகள் காரணமாக தரிசனத்துக்கு வர இயலாத சூழ்நிலையில் தரிசன தினத்திலிருந்து 90 நாள்களுக்குள் வழிபாடு செய்து கொள்ளும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கி உள்ளது. மேலும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவா்கள் தங்கள் தரிசன தேதியை விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் வாய்ப்பையும் கொவைட் தொற்று காரணமாக தேவஸ்தானம் வழங்கியுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா செல்லிடப்பேசி எண்- 18004254141, 93993 99399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments