செய்திகள்

சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல இன்று முதல் 4 நாள்களுக்கு அனுமதி

தினமணி

ஆவணி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் 4 நாள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் இன்று பிரதோஷமும், வெள்ளிக்கிழமை (ஆக. 26) அமாவாசை வழிபாடும் நடைபெற உள்ளது. 

இதையொட்டி இன்று முதல் ஆக. 27ஆம் தேதி வரை நான்கு நாள்கள் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்தக் கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

காய்ச்சல், கபம், இருமல் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதை தவிா்க்கலாம். 10 வயதுக்குள்பட்டோருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் அனுமதி இல்லை. சுவாமி தரிசனத்துக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகு பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். 

காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும். பக்தா்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக் கூடாது. கோயிலில் இரவில் தங்க அனுமதி இல்லை. அனுமதி வழங்கப்பட்டுள்ள நாள்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீா்வரத்து அதிகமாக இருந்தாலோ அனுமதி மறுக்கப்படும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த இரண்டே வாரத்தில் தென்மேற்கு பருவமழை..!

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

SCROLL FOR NEXT