கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றது.
முருகனின் அறுபடை வீடுகளிலும் திருக்கார்த்திகை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில், தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பழனி மலை அடிவாரத்திலிருந்து கோயிலுக்குச் செல்லும் படிப்பாதைகளில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால், மலைக்கோயிலுக்குச் சென்றுவரும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருவாரூர் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கார்த்திகை திருநாளையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.