முகப்பு
செய்திகள்

சபரிமலையில் புத்தாண்டு தரிசனத்துக்கு 90 ஆயிரம் பேர் முன்பதிவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் புத்தாண்டு தரிசனத்துக்கு 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். 

Updated On : 31 டிசம்பர், 2022 at 5:20 PM
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் புத்தாண்டு தரிசனத்துக்கு 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். 

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் கடந்த நவம்பா் 17-இல் தொடங்கி டிசம்பா் 27-இல் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, 3 நாள்களுக்கு சாத்தப்பட்டிருந்த சன்னிதானம் நடை, மகர விளக்கு பூஜைகளுக்காக வெள்ளிக்கிழமை மாலை மீண்டும் திறக்கப்பட்டது. 

மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நேற்று மாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இருப்பினும் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை நடை திறக்கப்பட்டிருந்தது. 6 மணி நேரத்திற்குள் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement

இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட போது பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். இன்று 85 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ளனர். இதனால் காலை முதலே பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

நாளை புத்தாண்டு தினம் என்பதால் தரிசனத்திற்கு 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதனால், இன்றும், நாளையும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.