முகப்பு
செய்திகள்

சந்திர கிரகணம்: திருப்பதி கோயில் 11 மணி நேரம் மூடல்!

சந்திர கிரணத்தை முன்னிட்டு  வரும் 8-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் 11 மணி நேரம் நடை சாத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

Updated On : 4 நவம்பர், 2022 at 12:08 PM
பகிர்:

சந்திர கிரணத்தை முன்னிட்டு  வரும் 8-ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் 11 மணி நேரம் நடை சாத்தப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

முழுநேர சந்திர கிரகணம் வரும் 8-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை கிரகணம் நடைபெறுகிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயில் காலை 8.40 மணிக்கு மூடப்பட்டு இரவு 7.20 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். 

இதனால் வழக்கமான விஐபி தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம், இலவச தரிசனம், ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் அன்றைய தினம் ரத்து செய்யப்படுகிறது. 

Advertisement

கிரகணம் முடிந்த பிறகு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அன்றைய தினம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்படாது. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் திட்டமிட்டு வருமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.