முகப்பு
செய்திகள்

திருவாடானை ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்!

கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

Updated On : 22 ஏப்ரல், 2024 at 1:06 PM
திருவாடானை பாரதி நகரில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் திங்கள்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேகம்
பகிர்:

திருவாடானை அருகே பாரதிநகரில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பாரதிநகர் பகுதியில் ஸ்ரீ கற்கவிநாயகர் கோயில் புதிதாக புனரமைக்கப்பட்டு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக நேற்று முதல் கால யாக பூஜை, தீப ஆராதனை தொடர்ந்து இன்று காலை ஆறு மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, அதனைத்தொடர்ந்து மகாபூர்ணாகுதி தீப ஆராதனை தொடர்ந்து யாகசாலையில் புனித குடங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரானது வேத மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்டது.

Advertisement

அதனைத்தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் உள்ள குடங்கள் சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்து கோபுர கலசங்களில் வேத மந்திரங்கள் முழங்கப் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் வைரவ சுப்பிரமணியம் குருக்கள், ரவி குருக்கள் செய்து வைத்தனர்.

இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.