கணபதி 
செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா யாரால், எப்படி வந்தது தெரியுமா?

விநாயகர் சதுர்த்தி விழா ஏன் கொண்டாடுகிறோம்? அதன் வரலாறு என்ன? என்பதைத் தெரிந்துகொள்வோம்.

இணையதளச் செய்திப் பிரிவு

இந்துக்களால் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி விழா.

முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.

அதன்படி, இந்த வருடம் வருகின்றன (செப்டம்பர் 7) சனிக்கிழமையன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. அப்படிப்பட்ட இந்த தருணத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஏன் கொண்டாடுகிறோம்? அதன் வரலாறு என்ன? என்பதைத் தெரிந்துகொள்வோம்.

மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழா பிரபலமாகிவிட்டாலும் இன்று நாம் பார்க்கும் விநாயகர் விழா கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவரான பாலகங்காதர திலகர் தான்.

1893-ம் ஆண்டு "சர்வஜன கனேஷ் உத்சவ்" என்ற பெயரில் இவர் ஆரம்பித்துவைத்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களே இன்றுவரை மக்கள் மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.

புராணப்படி அரக்கர்களின் கொடுமையில் இருந்து தங்களை காத்திட தவமிருந்து, சிவபெருமானிடன் தேவர்கள் முறையிடதன் பயனாக தடைகளை தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் விநாயகப் பெருமான்.

இவர் ஒரு ஆவணி மாத சதுர்த்தியன்று யானை முகத்தோடும், மனித உடலோடும் அரக்கன் கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்டார். எனவே, அன்று முதல் இந்த தினத்தை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட, மகாராஷ்டிரா, ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, கோவா ஆகிய மாநிலங்களில் கூடுதல் உற்சாகத்துடன் 10 நாள்கள் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்தியா மட்டுமின்றி நேபாளம், அமெரிக்கா, மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சி வரி முறைகேடு: மேலும் 2 போ் கைது

புத்தகம் வாசிப்பை வாழ்நாள் பழக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

பாஜக-ஆா்எஸ்எஸ் நிதீஷ் குமாரை குப்பையில் வீசும்: காா்கே

அதிமுக பூத் கமிட்டிளைக் கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளா்கள் நியமனம்

ஹிமாசல், உத்தரகண்ட்: நிலச்சரிவில் 6 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT