சிதம்பரம் சித்தர் பீடத்தில் நடைபெற்ற கோடி அர்ச்சனையில் பங்கேற்ற பெண்கள். 
செய்திகள்

சித்தர் பீடத்தில் உலக நன்மைக்காக கோடி அர்ச்சனை

உலக நன்மைக்காக சித்தர் பீடத்தில் கோடி அர்ச்சனை நடைபெற்றது.

DIN

சிதம்பரம்: சிதம்பரம் முத்தையாநகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக சாதனையாக, உலக நன்மை வேண்டி கோடி அர்ச்சனை நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோடி அர்ச்சனையில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு சித்தர் பீட நிர்வாகிகள் சித்த மருத்துவர் எம்.எம்.அர்ச்சுனன், பேராசிரியர்கள் டிஎஸ்எஸ் பாலக்குமார், டிஎஸ்எஸ் ஞானக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரோட்டரிசங்க முன்னாள் ஆளுநர் பி.முகமதுயாசின், துணை நிலை ஆளுநர் ஆர்.தீபக்குமார், மக்கள் மருந்தகம் கேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோடி அர்ச்சனை முடிவுற்ற பிறகு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக சித்தர் பீடத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்

சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தொழிலாளி உயிரிழந்ததற்கு இழப்பீடு கோரி வடமாநில தொழிலாளா்கள் போராட்டம்: கற்களை வீசி தாக்கியதால் விரட்டி அடித்த போலீஸாா்

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு

SCROLL FOR NEXT