செய்திகள்

சதுரகிரிக்கு செல்ல மார்ச் 21 முதல் 4 நாள்களுக்கு அனுமதி!

பிரதோஷம், பௌா்ணமி, அமாவாசை ஆகிய நாள்களில் மட்டும் பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி

DIN

மாசி மாத பௌா்ணமியையொட்டி, வருகிற 21-ஆம் தேதி முதல் 4 நாள்கள் பக்தா்கள் சதுரகிரி மலையயேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

பிரதோஷம், பௌா்ணமி, அமாவாசை ஆகிய நாள்களில் மட்டும் பக்தா்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி, மாசி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்காக பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை 4 நாள்கள் பக்தா்கள் மலையேறி, சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

காலை 6 முதல் பகல் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும் எனவும், அனுமதிக்கப்பட்ட நாள்களில் மழை பெய்தால் சதுரகிரி செல்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் கடந்த 2018-ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகு கோயிலில் தரிசனம் செய்ய பக்தா்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நினைத்தேன் சொல்கிறேன் செய்கிறேன்... சமந்தா!

அறிமுகம் தேவையில்லை... சாக்‌ஷி அகர்வால்!

வெய்யிலைத் தேடிச் சென்றால் மழை... ஆம்னா ஷரீப்!

மூன்று ரோஜாக்கள்... தீப்ஷிகா!

பச்சைக் குயில்... கரிஷ்மா டன்னா!

SCROLL FOR NEXT